நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வ
வீசி விட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம்
வலது கை கெடியாரம்
ஆணை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும்
நிழல் மட்டும்
போகலையே போகலையே
நெஞ்சுக் குழியில் நிழல் வந்து
விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மனம்
குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
பட்சி ஒறங்கிருச்சு
பால் தயிரா தோஞ்சிருச்சு
இச்சி மரத்து மேல
இல கூட தூங்கிருச்சு
காச நோய்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசை நோய் வந்த மக
அர நிமிஷம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
ஒரு வாய் எறங்கலையே
உள் நாக்கு நனையலேயே
ஏழெட்டு நாலா
எச்சில் முழுங்கலையே
ஏழை இளஞ்சிறுக்கி
ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே
ஓ...
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வ
வீசி விட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம்
வலது கை கெடியாரம்
ஆணை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலையே போகலையே
நெஞ்சுக் குழியில் நிழல் வந்து
விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே
கொட கம்பி போல மனம்
குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ